
இதயப் பாலையில்
நீரூற்றிப் போனவனே!
உன் நினைவோடு தான்
தினமும்
கண் உறங்குகிறேன்....
கனவிலும் உன் முகம்
கண்டு கலங்குகிறேன்!
உனை போன்ற ஆண்களை
கற்பனையிலும் தீண்டவில்லை..
காதலால் உனை போல்
எனை யாரும் தூண்டவில்லை!
நீங்காத உன் நினைவுகள்
நிம்மதியில்லாது செய்கிறதே...
காதல் அம்பை உன் பார்வை
உள்ளம் நோக்கி எய்கிறதே!
உனை அறிந்த நாள் முதலாய்
எனை நான் இழந்தேன்......
நின் அனுமதி ஏதுமின்றி
உன்னில் என்னை கலந்தேன்!
ஊணுறக்கம் மறந்த எனை
தயை கூர்ந்து ஏற்பாயோ...
நின் அன்பினை நாடும் என்
ஏக்கமதை தீர்ப்பாயோ?