Sunday, May 11, 2008

உடைந்த இதயம்


நட்புடன்
உறவாடினார்கள்
பல நண்பர்கள்
சிலர்
உடைத்தே விட்டார்கள்
இதயத்தை
உடைந்த இதயத்தை
நீ ஒட்டி வைத்தாய்
இனிய நண்பனாக வந்து
ஒட்டும் போது நான்
உணரவில்லை என்றாவது
நீயும் உடைப்பாயென்று

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

5 comments:

Shibly said...

nice poems

Anonymous said...

very nice poem

அகரம் அமுதா said...

தங்கள் அந்தக் கவிதையைப் படித்தவுடன் நான் எப்பொழுதோ மனமுடைந்து எழுதிய வெண்பா நினைவிற்கு வந்துவிட்டது.

ஈறிற்றால் பல்லுறவு நீங்கிவிடும்! ஏரிகளில்
நீரற்றால் நீங்கிவிடும் நீர்ப்பறவை! -பாரினில்
தோணிகரை தொட்டால் துடுப்புறவு நீங்கிவிடும்!
நாணயம் இல்லையெனில் நட்பு!

நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே!

அகரம்.அமுதா

Jumana said...

kpfTk; fUj;jhokhd mofhd ftpij. vd; ,jaj;ijj; njhl;L tpl;lJ..!
ftpAyfpy; cq;fs; Nrit ,d;Dk; njhlu vd; md;ghd tho;j;Jf;fs;.!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத் said...

மிகவும் கருத்தாழமான அழகான கவிதை. என் இதயத்தைத் தொட்டு விட்டது..! கவியுலகில் உங்கள் சேவை இன்னும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.!!

This is Jumana's Comments.

Thanks Jumana