Tuesday, September 23, 2008

உயிர் நேசம்

உயிரே…
உன்னைக் கண்டால்
என் மனதில் ஏனோ ஏக்கம்
உன் குரலை கேட்டால்
என் நெஞ்சினில் ஏனோ மயக்கம்
உன்னுடன் பேச நினைத்தால்
உன் உள்ளத்தில் ஏனோ தயக்கம்
என் இயத்தில்
என்றும் உன் உருவம்
உன்னிடம் எப்படி
சொல்வேன் என்ற குழப்பம்?
உண்மையில்
நான் உன்னை
உயிருக்கு உயிராக
நேசிக்கிறேன்…
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

எனக்குள் உறங்கும் நீ

கற்பனை வளர்த்தேன்
கனவுலகில் மிதந்தேன்
காரியம் கை கூடக்
கடும் பிரயத்தனம் எடுத்தேன்.

ஆனால்
நான் அடியெடுத்து வைக்கும்
பாதையெல்லாம்
துன்பமும் துயரமும் என்னைத்
துரத்திக் கொண்டு வந்தன.

சாணஏற
முழஞ்சறுக்கும்
சறுக்கு மர ஏற்றமாக
என் வாழ்க்கை அமைந்து விட்டது
ஓயாத போராட்டத்தின் மத்தியில்
உள்ளம் சோர்ந்து
உருக்குலைகிறேன் நான்
எனக்குள் உறங்கும் நான்…
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

காத்திருப்பு

காலம் விதியின்
கைகளில் வரையறுக்கப்பட்டிருக்கிறது
காலச்சக்கரம்
வெகுவாய் சுழன்று கொண்டிருக்கிறது
பகல்களும் இரவுகளும்
நாளுக்கு நாள் கடக்கின்றன.

எனது நிமிடங்களை
எண்ணிப் பார்க்க இங்கு
எவருமில்லை
எனது சுவாசக் காற்றின்
கனத்தையளக்க இங்கு
யாருமில்லை.

யுகங்கள்
மலர்களைப்பேர்
மலர்ந்தும் உதிர்ந்தும்
போகின்றன.

நான் உனக்காக
எத்துனை காலம்
காத்திருப்பதென்பது?
எனக்கே தெரியாமல்
போகின்றன…
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

தூய நட்பு

அன்பு நீர் அருவி பாயும்
இமயம்
ஆபத்தில் கை கொடுக்கும்
சமயம்
பாசத்தில் நனைய வைக்கும்
இதயம்
நேசத்தில் உருக வைக்கும்
அதிசயம்.

பலவேளை உணவளிக்கும்
கருணை
சில வேளை புத்தி சொல்லும்
உரிமை.

இக்காட்டில் வாரி வழங்கும்
வள்ளல்
உன்னைக் கண்டால் என் மனதிலோரு
துள்ளல்.

துன்பத்தில் சிலவேளை மனது
தளரும்
அப்போது நட்பின் ஆறுதல் வாய்
மலரும்.

பணம் பார்த்து
பழகுவதில்லை நட்பு
குணம் பார்த்து
பகிர்ந்து கொள்வதே நட்பு.

இன்பத்தில் மட்டும்
இணைவதல்ல நட்பு
துன்பத்தை
துடைப்பதே நட்பு..
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

வானம் உனக்கு வசமாகும்

ஓ..இளைஞனே
உன்னை நீயே காயப்படுத்திக் கொண்டு
ஒரு மூலையில்
ஒதுங்கிக் கொண்டால்
வெற்றி வாய்ப்புக்கள்
விலாசம் தெரியாமல் போய்விடும்.

முட்களுக்கு மத்தியில்தான்
ரோஜாக்களின்
ராஜாங்கம் நடப்பது
உனக்குத் தெரியாதா என்ன?

முத்துக்குளிப்பவன்
மூச்சை அடக்கித்தான் ஆகவேண்டும்
இமய சிகரத்தை
எட்ட நினைப்பவன்
கடிமான பாறைகளைக்
கடந்துதான் தீர வேண்டும்.

நெஞ்சாரத் துணிவை வளர்த்து
நம்பிக்கை நீர் பாய்ச்சி
விடியலை நோக்கி விழித்தெழு
வானும் உனக்கு வசமாகும்.
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

உயிர்

பகலுக்கு உயிர் சூரியன்
இரவுககு உயிர் நிலவு.

ஊருக்கு உயிர் நதி
தரணிக்கு உயிர் மழை.

மரத்துக்கு உயிர் வேர்
செடிக்கு உயிர் மலர்.

பாட்டுக்கு உயிர் இசை
செல்வத்திற்கு உயிர் தர்மம்.

மனதுக்கு உயிர் தூய்மை
பெண்ணுக்கு உயிர் கற்பு.

எனக்கு உயிர் நீ
என் கவிதைகளுக்கு உயிர் நீ..நீ..நீ..
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

எந்நாளோ

கண்ணின் பார்வையாய் -என்
கண்ணில் கலந்து விட்ட
கண்ணாளா –நீ
என்னைக் கரம் பிடிக்கும் நாள்
எந்நாளோ?

காலம் கனியும் வரை
கை முதலும் சேரும் வரை
காத்திருக்குமாறு
கூறினாய் அன்று.

காலம் கனிந்தும்
கை முதல் சேர்ந்தும்
காத்திருக்க வைக்கிறாய்
இன்று.?

நித்திரையில் வந்து
நித்தம்..நித்தம்
சித்திரவதை செய்கிறாய் என்னை?
சத்தியமாய்
சதாவும் நினைக்கிறேன் உன்னை?

தோப்புக்கு வருவேன் என்றாய்
தோதான செய்தியை
தருவேன் என்றாய்?
தேப்புப்பக்கம் வரவில்லை- நீ
தரிசனமும் தரவில்லை.?

பெரியதோர் இடத்தை
தெரிந்து விட்டாயோ?
பேதை என்னை நீயும்
பிரிந்து விட்டாயோ?

காத்திருப்பேன்…காத்திருப்பேன்
கண்ணாளா -நீ
என்னைக் கரம் பிடிக்கும் நாள்
எந்நாளோ?
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

மௌனம் பேசியது

என்னவனே
நான் என்றும் உன்னவளே
நெஞ்சக்கூட்டில்
நின் நினைவுகளை வளர்த்து
நான் படும் வேதனை
உனக்குத் தெரியுமா?

அன்பே
அளவில்லா அன்பை
அனுதினம் உன் மீது பொழிந்துவிட்டு
நான் படும்
தவிப்பும் தாபமும்
இன்னுமா உனக்கு புரியவில்லை.?

அன்று
சாளத்தினூடே
உன் பூமுகம் கண்டேன்
ஒளி கண்ட தாமரையாய் நான்
உவகை கொண்டேன்.

உனக்கென நானும்
எனக்கென நீயுமாய்
உறவை வளர்த்து…
ஓன்றுக்கள் ஒன்றாகி
உருகி வடிகிறோம்…நாம்?

நீ பேபாகும் பாதையெல்லாம்
என் நினைவு
என் கண்கள் பேசும்
மௌன மொழி
இதய வீணை மீட்டும்
இனிய ராக மொழி
இன்னுமா புரியவில்லை உனக்கு?
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

Saturday, September 20, 2008

மௌனத் துயரம்!

மலரும் தென்றலும்

உரையாடும் மௌன மொழியாக

மனத்துயரங்கள் கனத்து

கண்ணில் கரையும்!


காலம் தந்த சவுக்கடியால்

காயப்பட்ட இதய ரணங்கள்

கணத்துக்கு கணம்

கண்ணெதிரே கோலம் போடும்!


முட்டைக்கோதாய்

உடைந்து நொறுங்கிய

இதயச் சுவரில் ஒட்டியவாறு

நினைவுத் துலையில்

தோரணங்கள் ஆடும்!


தூரப்படாத துன்ப நினைவுகள்

தூக்கத்திலும் விழிப்பிலும்

தொடர்ந்து நின்று

மௌனத்துயரமாக பாழ்படும்!
----------------------------------
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

Sunday, May 11, 2008

உடைந்த இதயம்


நட்புடன்
உறவாடினார்கள்
பல நண்பர்கள்
சிலர்
உடைத்தே விட்டார்கள்
இதயத்தை
உடைந்த இதயத்தை
நீ ஒட்டி வைத்தாய்
இனிய நண்பனாக வந்து
ஒட்டும் போது நான்
உணரவில்லை என்றாவது
நீயும் உடைப்பாயென்று

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

ஒரு குரலின் குயில்


பத்திலொரு நூற்றாண்டாய்
படித்துக் காட்டுகின்ற என் கவிதை
காத்திரமான இப்பூவுலகில்
நித்தியமான என் அன்பை
மதித்திடத் தெரியாமல் - நீ
மிதித்துக் கொண்டோடுவது எங்கே சொல் ...

ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

விடியலை நோக்கி


ஓ...இளைஞனே !
உன்னை நீயே
காயப்படுத்திக்கொண்டு
ஒரு மூலையில்
ஒதுங்கிக்கொண்டால்
வெற்றி வாய்ப்புக்கள்
விலாசம் தெரியாமலே
போய்விடும் !

முட்களுக்கு
மத்தியில்தான்
ரோஜாக்களின்
ராஜாங்கம் நடப்பது
உனக்குத்
தெரியாதா...என்ன ?

முத்துக்குளிப்பவன்
மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும் !
இமய சிகரத்தை
எட்ட நினைப்பவன்
கடினமான பாறைகளைக்
கடந்துதான் தீரவேண்டும் !

நெஞ்சாரத்துணிவை வளர்த்து
நம்பிக்கை நீர் பாயச்சி
விடியலை நோக்கி விழித்தெழு !
வானம் உனக்கு வசமாகும் !!

ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

Wednesday, April 30, 2008

உறுதி கொள் !

ஓ... மனமே !
உன் மாளிகையில்
ஒளியில்லையா?
ஓயாத இருட்டடிப்பா?
ஒரு போதும் கலங்காதே !

ஒரு பொழுது இரவானால்
மறுபொழுது பகலாகலாம் !
உன் இலட்சியத்தை அடைய
உறுதியுடன் போராடு !

சாதனை படைக்க முற்பட்டால்
வேதனைகளைத் தாங்கும்
மனோபலமும் தைரியமும்
கட்டாயம் தேவை என்பதை
மறந்துவிடாதே !

தொடரும்
தோல்விகளைக் கண்டு
துவண்டுவிடாமல்
துணிந்துநில் !
தொடர்ந்து செல் !!
வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் !!!

-ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

யதார்த்தம் !

வாழ்க்கைக் கடலில்
வசந்த காலத் தென்றல்
வருடும் போது மட்டும்
வந்து ஒட்டிக்கொள்ளும்
உறவினர்கள் - நான்
துன்பப்புயலில் சிக்கி
தத்தளிக்கும் வேளையில்
கண்டும் காணாதவர்களாய்
மாயமாய்
மறைவதுதான் ஏனோ..?

-ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.