Thursday, December 30, 2010

வியர்வையின் விலை...!


தொழில் என்றாலே
சோகமாய் விடியும்
அதிகாலை...
காரணம்
முப்பது நாட்களும்
மூர்க்கதனமான வேலை!

மேலதிக வேலைகளாலும்
பெருக்கெடுக்குது
ஆறாக வியர்வை...
எனினும் வாழ்வுச் சூழலோ
இதுவரை காணவில்லை
உயர்வை!

முதலாளி வர்க்கத்துக்கு
இன்றியமையாதது
தொழிலாளர்கள் எம் பலம்...
ஆயினும்
மாத இறுதியில் கிடைப்பதோ
சொற்ப தொகை சம்பளம்!

உழைத்து உழைத்து
களைத்துப் போனாலும்
உணராரோ எம்
வியர்வையின் விலை...
எப்பாடு பட்டாலும்
தீர்ந்து விடுமா
எமைத் தாக்கும்
துன்ப அலை???

Friday, December 3, 2010

சாதல் நன்றே...!


அடிமனதில் புதைந்திருக்கும்
ஆசை நினைவுகள் எழுகிறதே..
கொடி இடையாள் உன் பிரிவால்
நிம்மதி என்னில் தொலைகிறதே!

நித்தம் நித்தம் என் விழியில்
ரத்தம் தான் வழிகிறதே..
யுத்தம் புரிந்து உன் எண்ணம்
வாழ்க்கையை அழிக்கிறதே!

ஏன் பெண்ணே கனவுகளிலும்
நீ வந்தாய் தவறாது..
உன் நினைவிலாவது நானில்லை
சொல் நீ - என் தவறேது?

அன்று
மழைத்துளியின் ஸ்பரிசத்தில்
உன் மலர்வதனம் கண்டேனே..
காதலாகி கசிந்துருகி
உன் ஞாபகம் கொண்டேனே!

பின்பு
வாய்ப்பு வந்த போதெல்லாம்
வாய் திறந்து பேசேனே..
உன் திருமண
செய்தி வந்தபோது
என் தவறை உணர்ந்தேனே!

காதலெனும் வெள்ளமெனை
நிர்க்கதியாய் ஆக்கியதே..
சாதல்தான் நன்றென்று
பைத்தியமாய் மாற்றியதே!!!