Wednesday, January 7, 2009

குரலுடைந்த குயில் !

சோலை மலர்களே - அந்த
சுந்தரனின் நினைவால் சோகமாய்
சோர்ந்து போய் இச்சுந்தரி
இருப்பதை அறிவீ;ர்களா?
ஓடும் மேகங்களே...
மன்னனின் மௌனத்தால் - இம்
மங்கையின் மாறாத மனம்
மங்கிக் கிடப்பதை மொழிவீர்களா?
செந்தூரப் பூக்களே
சேர்ந்தழும் என் தேகத்தை
தேற்ற தேனிலும் இனியவனை
தெம்போடு திரும்பிட
சொல்வீர்களா?
தென்றல் சலசலப்புகளே
என் உயிரில் திராணியற்று நான்
திகைப்புடன் கருகிக் கொண்டிருப்பதை
தலைவன் அவனிடம் செப்புவீர்களா?
கூவுங் குயில்களே...
இந்தக் குயில் கூண்டுக்குள்
அடைபட்டுக் குரலுடைந்து
கூவ முடியாதிருப்பதை
இளவரசன் அவனிடம்
முறையிடுவீர்களா?
-------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

1 comment:

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் காதலை மையமாக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது....இது உங்கள் வாழ்க்கை அனுபவமா...? அல்லது அனுபவசாலிகளுக்கா....? இருந்தாலும் உங்கள் கவிதை மனசை வருடுகிறது....வாழ்த்துக்கள்

- கிளியனூர் இஸ்மத்