Tuesday, October 11, 2011

தவிப்பு!


தனிமையின் தவிப்பில்
உன்
தொலைபேசி அழைப்புகள்தான்
எனக்கு துணையாகின..

நீ
காலத்தின்
கட்டளைக்கிணங்க
என்னை விட்டுப்போன பின்
துயரங்களே
என் தோழியாகின..

நிமிஷங்களின் நகர்வுகள்
எனக்குப் புரிந்தது
யுகங்களாகத்தான்!

உன்
குரல் கேட்பதற்காகவே
என் செவிகள்
தவமிருந்ததை
நீ அறிவாயோ என்னவோ?

எனைப் பார்க்க
இன்று வருவாய்..
இல்லையில்லை
நாளை வருவாய்
என்றெண்ணியே
என் வாழ்நாள் கழிகிறது!

நாட்கள் சக்கரம் பூட்டி
ஓடும் என்று பார்த்தால்
அவையோ
ஆமை வேகத்தில் நகர்ந்து
என் உயிரை வதைக்கிறது!

என் குழந்தாய்..
திருமணமுடித்து
வெளிநாடு போன நீ..
இந்தத் தாயைப் பார்க்க வராமல் - என்
இதயத்தைப் பிளந்தாய்!

மகனே..
உனைக் காணவே
உயிரோடிருக்கிறேன்..
ஒரே ஒருமுறை வந்து
பார்த்துவிட்டுப் போ!!!

5 comments:

gvarathu said...

அருமையாக ஒரு தாயின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

ஆமினா said...

உருக்கமான வரிகள்

பிரிவின் வலி தெரிகிறது வார்த்தைகளில்

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

பிரிவின் துயரை மிக அழகாக உணர்வுபூர்வமான வரிகளால்
படைத்துள்ளீர்கள் சகோதரி .இவ்வாறு ஏங்கித் தவிக்கும் தாயின் உள்ளம் மகிழும் நிகழ்வுகள் என்னாள் மலருமோ...!!!
மிக்க நன்றி பகிர்வுக்கு .(உங்கள் தளத்தை எனக்கும் அறிமுகம்
செய்துவைத்த சகோதரி ஆமினாவுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும் )

ruby said...

ஒரு தாயின் பாச வலி...