Sunday, May 22, 2011

காலங்களின் பிடிக்குள்!

இளையவள் என்
வளையல் ஓசையில்
உன் இதயம்
சிக்கிக்கொண்டதாய்
சொன்னாய்!

நான் சிரிப்பதால் தான்
பறவைகள்
இறக்கை விரித்துப் பறப்பதாய்
சொன்னாய்!

அழகிய ரோசாவை
நட்டுவிடக்கூடிய
அழகிய இடம்
என் கன்னக்குழி என்றாய்!

இவற்றைக்கேட்டு
என் உள்ளம்
உன் ஞாபகங்களால்
நிறைந்துவிட்டது!

என் இதயப்பூந்தோட்டத்தில்
பூக்கள் நிறையவே
பூக்கத் தொடங்கின!

உன் அன்பால் கட்டுண்டுதான்
போனேன் நானும்!

எனினும்..
காலங்களின் பிடிக்குள் அகப்பட்ட நீ
கொழுத்த சீதனம் தின்று
பங்களா வீட்டின் எசமான்
என்ற பெயரில்
வேலைக்காரனானாய்!!!
சாலையில் தொலைந்த கவிதை!

அந்த சாலையில் தான்
என் கவிதைகளைத் தொலைத்துவிட்டேன்!

இப்போதுகளில் அதை
கண்டுபிடிக்கவே முடியவில்லை..
கண்டு பிடிக்க வழியுமில்லாதபடி
அந்த சாலையைவிட்டு
நான் வெகுதூரம் வந்தாயிற்று!

மனசு கனக்கிறது
இதயம் வெடிக்கிறது
புதுக்கவிதை வாசத்தில் நான்
சிறகடிக்க நினைத்தாலும்
மரபுக் கவிதை என்னை
கைவிடாதபடி பற்றியிருக்கிறது!

வியர்வையில்
உயர்வைத் தேடுகிறேன்..
பழைமையிலிருந்துகொண்டு
புதுமையைப் பார்க்கிறேன்..
ஏனெனில்
கனவுலகில் மிதக்கும்
கற்பனைக் கவிஞன் நான்!

உண்மையில்
அந்த சாலையில்தான்
நான்
என் கவிதைகளைத் தொலைத்தேன்
கண்டுபிடித்தால்
சொல்லி விடுங்கள்!!!

1 comments:

F.NIHAZA said...

அருமையான வரிகள்....