அந்த சாலையில் தான்
தொலைத்துவிட்டேன்
என் கவிதைகளை!
இப்போதுகளில் அதை
கண்டுபிடிக்கவே முடியவில்லை..
கண்டு பிடிக்க வழியுமில்லாதபடி
நான் வெகுதூரம் வந்தாயிற்று
அந்த சாலையைவிட்டு!
மனசு கனக்கிறது
இதயம் வெடிக்கிறது
புதுக்கவிதை வாசத்தில் நான்
சிறகடிக்க நினைத்தாலும்
என்னை
கைவிடாதபடி பற்றியிருக்கிறது
மரபுக் கவிதை!
வியர்வையில்
தேடுகிறேன் உயர்வை..
பழைமையிலிருந்துகொண்டு
பார்க்கிறேன் புதுமையை..
ஏனெனில்
கனவுலகில் மிதக்கும்
கற்பனைக் கவிஞன் நான்!
உண்மையில்
அந்த சாலையில் தான்
தொலைத்துவிட்டேன்
என் கவிதைகளை..
யாராவது கண்டுபிடித்தால்
சொல்லி விடுங்கள்!!!
1 comment:
இலட்சியம், கவிதை தொலைந்தாலும் ஒருநாளும் மறைந்து போகாது....இதயம் இன்று கனத்தாலும் இல்லையென்று போய்விடாது. உங்கள் "சாலையோரக் கவிதை" என்றாவது ஒருநாள் சோலைக்குள் பூவாகப் பூக்கும் என்பது நிச்சயம்!! உணர்வு பூர்வமான உங்கள் கவிதை என் பயணப் பாதைகளை மனத்திரையில் ஓடச்செய்கிறது...
Post a Comment