Thursday, June 28, 2012

விரைந்தோடி வா!


இறந்தகாலம் முடிந்திற்று..
நிகழ்காலமும் கழிந்திற்று..
எதிர்காலம் நமக்காக
பன்னீர் தூவி வரவேற்கும்!

என் இளமையின்
பாதங்களில்
உன்னுடைய சுவடுகள்..
கரைதேடும் அலையாக
காதலின் நினைவுகள்!

வாழ்வென்றாலும்
சாவென்றாலும்
உன்னுடனே சேருவேன்..
வாடைக்காற்றை சாட்சியாக்கி
உனக்கிதை நான் கூறுவேன்!

உன் கைகோர்த்து
நடக்கும் சமயங்களில்
கவலைகள் யாவும்
காலடியில் வீழும்!

கற்பனையில் உனை எண்ணி
நானே ரசித்தேன்..
பிடிக்காத பாவற்காயையும்
இனிப்பாக ருசித்தேன்!

அர்த்தராத்திரி தூக்கத்தின்
கனவுகளில் வண்ணங்கள்..
கருவறைக் குழந்தையாய்
தலைகீழாய் எண்ணங்கள்!

என் அகத்தைப் புரிந்த
ஆருயிர் நீ..
என் வாழ்வை பகிரும்
உரிமையும் நீ!

எங்கிருக்கிறாய் எனைவிட்டு
என் மன்னவா..
உனக்காக காத்திருக்கிறேன்
விரைந்தோடி வா!!!

1 comment:

shafira farook said...

awesome..

அழகான வரிகள்,
அதிலும் மனதில் ஆழமாய் நின்ற வரிகள்
இவை

" பிடிக்காத பாவற்காயையும்
இனிப்போடு ருசித்தேன் "

சற்று நகைச்சுவை உணர்வும் இழையோடி இருக்கிறது
உங்கள் பணி மென் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்